சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த திங்கள்கிழமை பெங்களூர் அணியுடன் மோதியது. இப்போட்டியில் மிட்செல் மார்ஷ் 4 பந்துகள் மட்டுமே வீசினார். காயம் காரணமாக அப்போட்டியில் பில்டிங்கில் இருந்து விலக்கினார்.
பின்னர், இரண்டாவதாக களமிறங்கிய ஹைதராபாத் அணிக்காக பேட்டிங் செய்ய மிட்செல் மார்ஷ் களமிங்கினர். ஆனால், காயம் அதிகமாக வலி தாங்கமுடியாமல் மைதானத்தை விட்டு வெளியேற சக வீரர்களின் உதவியை நாடினார்.
இந்நிலையில், வருகின்ற சனிக்கிழமை ஹைதராபாத் அணி கொல்கத்தா அணியுடன் மோதவுள்ளனர். இந்நிலையில், காயம் காரணமாக மிட்செல் மார்ஷ் பதிலாக ஜேசன் ஹோல்டர் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் விரைவாக குணமடைய விரும்புகிறோம் என அவருக்கு ஹைதராபாத் அணி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
unknown node