ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
unknown nodeடாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, 249 ரன்கள் குவித்தது. ரஹ்மத் ஷா 72 ரன்களும், ஜனாத் 45 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் பெரேரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
unknown node250 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியின் தரங்கா 36 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் குறைந்த ரன்களிலேயே ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் 41 புள்ளி 2 ஓவர்களில் 158 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 91 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
DINASUVADU