AUSVIND:இன்று கடைசி டி-20 கிரிக்கெட் ..!தொடரை சமன் செய்யுமா இந்திய அணி .!

இன்று  ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையிலான 3-வது டி-20 கிரிக்கெட் போட்டி  நடைபெறுகிறது.

இன்று  ஆஸ்திரேலியா – இந்திய அணிகளுக்கு இடையிலான 3-வது டி-20 கிரிக்கெட் போட்டி  நடைபெறுகிறது.

நேற்று முன்தினம்  இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.ஆஸ்திரேலிய அணி 19 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது.இதனால் ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டது.

இந்திய அணியின் பந்து வீச்சில் கலீல் ,புவனேஸ்வர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

unknown node

தொடர்ச்சியாக  மழை பெய்ததால் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டது.

இந்நிலையில் இன்று  கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.இந்த போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெறுகிறது.

3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது .இந்நிலையில் இன்று  நடைபெறும் போட்டியில் வெற்றிபெற்றால்தான் தொடரை சமன் செய்ய முடியும்.இந்திய அணி தோல்வி செய்யும் பட்சத்தில் தொடரை இழந்து விடும்.எனவே இன்றைய  போட்டியை இந்திய ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருக்கின்றனர்.