AUSVIND: நாளை கடைசி டி-20 கிரிக்கெட் ..!தொடரை சமன் செய்யுமா இந்திய அணி ...!

ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையிலான 3-வது டி-20 கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியா – இந்திய அணிகளுக்கு இடையிலான 3-வது டி-20 கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது.

நேற்று  ஆஸ்திரேலியா – இந்திய அணிகளுக்கு இடையிலான 2-வது டி-20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.இந்த போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது.

2-வது டி-20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலிய அணி 19 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது.இதனால் ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் பந்து வீச்சில் கலீல் ,புவனேஸ்வர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

மெல்போர்னில் மழை பெய்ததால்  இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டது.

unknown node

இந்நிலையில் நாளை கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.இந்த போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெறுகிறது.

3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது .இந்நிலையில் நாளை நடைபெறும் போட்டியில் வெற்றிபெற்றால்தான் தொடரை சமன் செய்ய முடியும்.இந்திய அணி தோல்வி செய்யும் பட்சத்தில் தொடரை இழந்து விடும்.எனவே நாளைய போட்டியை இந்திய ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருக்கின்றனர்.