பெங்களூர் – பஞ்சாப் அணிகள் மோதல்..!! முதல் இடத்தை தட்டி பறிக்குமா RCB..??

Royal Challengers Bangalore clash with Punjab Kings at Narendra Modi Stadium in Ahmedabad today.

இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதவுள்ளது.

இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் 26 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதவுள்ளது.  இந்த இரண்டு அணிகளும் இதுவரை 24 போட்டிகள் நேருக்கு நேராக மோதியதில் 12 போட்டியில் பெங்களூர் அணியும், 14 முறை பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை 6 போட்டிகள் விளையாடி 5 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 3 வது இடத்தில் உள்ளது. மேலும் இன்று நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிபட்டியலில் முதலிடத்திற்கு செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

அதைபோல் பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 6 போட்டிகள் விளையாடி 2 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது. இதனால் பஞ்சாப் அணிக்கு இன்று நடைபெறும் இந்த போட்டி முக்கியமான போட்டி என்று கூறப்படுகிறது. மேலும் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.