புதன்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் கடைசி பந்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வங்கதேசம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிராக வங்கதேச அணி பெற்ற முதல் சர்வதேச தொடர் இதுவாகும்.மேலும், கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக வங்கதேசம் தொடரை வெல்வது இது இரண்டாவது முறையாகும்.
டாக்காவில் இன்று நடைபெறும் 2ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 7விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது.இதன் பின் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே தடுமாற்றத்துடன் ஆட்டத்தை தொடங்கியது.
இறுதியில் 9 விக்கெட்களை இழந்த இந்திய அணி கடைசி பந்தில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இருந்த நிலையில் 1 ரன்னை மட்டும் எடுத்து தோல்வியை தழுவியது.இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயர்(82),அக்சர் படேல் (56),ரோஹித் சர்மா(51) எடுத்து மோசமான தோல்வியை தவிர்த்தனர்.
ஏழு ஆண்டுகளுக்கு பிறகு வங்கதேச அணி இந்தியாவை வீழ்த்தி வரலாற்று சாதனையை படைத்துள்ளது.