நடப்பாண்ட ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் சொதப்பலான விளையாட்டை விளையாடி வருகிறது. நேற்று சின்னசாமி மைதானத்தில் பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் தோல்வியடைந்து புள்ளி விவரப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்து இதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி அதிரடி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பது போல மிகவும் அதிரடியாக விளையாடியது என்று சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு மிடில் ஆர்டரில் வந்த படிதார் மற்றும் டிம் டேவிட் பந்தை சிக்ஸர் பவுண்டரி என சிதறடித்தனர். அதிலும் குறிப்பாக டிம் டேவிட் 25 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து சென்னை அணியை மிரள வைத்தார் என்று சொல்லலாம்.
இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 250 ரன்கள் எடுத்து 251 என்ற இமாலய இலக்கை சென்னை அணிக்கு நிர்ணயித்தது. எனவே பிரம்மாண்ட இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பமே விக்கெட்டுகளை விட்டது. ஓபனிங் மற்றும் மிடில் ஆர்டர்களில் மீண்டும் சொதப்பிய காரணத்தினால் சென்னை அணி இந்த போட்டியிலும் தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் மட்டும் இந்த சீசன் சென்னை அணி தோற்கவில்லை இதற்கு முன்னதாக விளையாடிய இரண்டு போட்டிகளும் சென்னை அணி தோல்வி அடைந்திருந்தது. இப்போது பெங்களூர் அணிக்கு எதிராக தோல்வி பெற்று விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளி விவர பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இப்படியான சூழலில் சென்னை அணி தொடர்ந்து சொதப்பலுக்கு காரணம் குறித்த தகவல்களை பார்ப்போம்.
முதலில் முக்கியமான விஷயமே சென்னை அணியின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் பேட்டிங் என்று சொல்லலாம். ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் இருவரும் இணைந்து நல்ல தொடக்கத்தை இதுவரை அணிக்கு கொடுக்கவில்லை. இதுவே சென்னை அணியின் பேட்டிங்கிற்கு பெரிய சிக்கலாக அமைந்தது என்று தான் சொல்லவேண்டும்.
இருவரும் இணைந்து சரியான ஓப்பனிங் கொடுத்தால் தான் அவர்களுக்கு அடுத்ததாக மிடில் ஓவரில் களமிறங்கும் வீரர்கள் அழுத்தம் இல்லாமல் விளையாடுவார்கள். ஆனால், சென்னை அணி கடந்த 3 போட்டியில் அதனை செய்யவில்லை.
அடுத்ததாக பெரிய சிக்கலான விஷயமாக சென்னைக்கு இருக்கும் விஷயம் என்னவென்றால் பீல்டிங் என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், கேட்ச் விடுவது, பந்தை பவுண்டரி லைனுக்கு விடுவது என மோசமான ஆட்டத்தை சென்னை வெளிப்படுத்தி வருகிறது. எனவே, அடுத்த போட்டியில் அதனை சரி படுத்திவிட்டு விளையாடினாள் நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
அதைப்போல மிகவும் முக்கியமான காரணமே முன்னாள் கேப்டன் தோனி இன்னும் விளையாடாமல் இருப்பதும் டெவால்ட் பிரெவிஸ் இருவரும் விளையாடாமல் இருப்பதும். இவர்கள் விளையாடினாள் நிச்சயமாக மிடில் ஆர்டர் இன்னும் ஸ்டார்ங் ஆகும் தோனி அணிக்கு மீண்டு வர இன்னும் சில நாட்கள் ஆகும் டெவால்ட் பிரெவிஸ் அடுத்த போட்டியில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
