அட சிக்ஸா ! கொஞ்சம் பேட்டை கொடு பார்ப்போம் பென் ஸ்டோக்ஸால் வைரலான வீடியோ

Damn Six! Let's give the hood a viral video by Ben Stokes

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான நேற்று மூன்றாவது ஒருநாள் போட்டி புனேவில் உள்ள எம்.சி.ஏ ஸ்டேடியத்தில் நடைபெற்றது.இந்த போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஷர்துல் தாகூர் தனது பேட்டிங் திறனை மீண்டும் வெளிப்படுத்தினார். இந்தியாவுக்காக 8 வது இடத்தில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய தாகூர்,மூன்று சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரிகளுடன் 21 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில் ஷர்துல் தாகூர் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த பொழுது பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தை  சிக்ஸாக மாற்றினார்.அப்பொழுது பென் ஸ்டோக்ஸ்  ஷர்துல் தாக்கூரின் பேட்டை வாங்கி சுவாரசியமாக சரிபார்த்தார்.இந்த நிகழ்வில் இருவரும் நட்புடன் சிரித்தனர் தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 329 ரன்களை எடுத்து இருந்தது.

unknown node