ஏற்கனவே கேப்டனாக இருந்து ஓய்வுபெற்ற நிலையில் தற்போது மீண்டும் கேப்டனாக மாறியுள்ளார் தோனி
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கும் சம்பிரதாய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இந்திய அணி சந்திக்கிறது.
இந்தியாவுடனான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியில் தோனி (கேப்டன் ),ராகுல்,ராயுடு,கேதார் ஜாதவ்,தினேஷ் ,குல்தீப்,ஜடேஜா,தீபக் சாஹர், சித்தார்த் கவுல், கலீல் அகமது,மனிஷ் பாண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் .இதையடுத்து இந்திய அணி பந்துவீசி வருகிறது.
இன்றைய போட்டியில் ரோகித் ,தவான்,பூம்ரா ,சாகல்,புவனேஸ்வர் ஆகியோருக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது.ரோகித் ஓய்வால் தோனி இந்த போட்டியில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.இது 200 போட்டியாகும்.ஏற்கனவே கேப்டனாக இருந்து ஓய்வுபெற்ற நிலையில் தற்போது மீண்டும் கேப்டனாக மாறியுள்ளார் தோனி .