டி.என்.பி.எல் : இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்ற சூப்பர் கில்லீஸ்!

தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.இந்த இறுதிப்போட்டியில் சேப்பாக் கில்லீஸ்

தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.இந்த இறுதிப்போட்டியில் சேப்பாக் கில்லீஸ் அணியும் , திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதியது.

unknown node

இப்போட்டியில் டாஸ் வென்ற  சேப்பாக் கில்லீஸ் அணி முதலில்  பேட்டிங் தேர்வு செய்தது நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்த சேப்பாக் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 126 ரன்கள் சேர்த்தது.

unknown node

127 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதல் மூன்று ஓவரில் 3 விக்கெட்டை இழந்தது. மத்தியில் களமிறங்கிய வீரர்கள் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இருப்பினும் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 114 ரன்கள் எடுத்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

unknown node

இரண்டாவது முறையாக  சேப்பாக் கில்லீஸ் அணி கோப்பையை கைப்பற்றி உள்ளது.  சிறப்பாக விளையாடி 5 விக்கெட்டை வீழ்த்திய சேப்பாக் கில்லீஸ் அணி வீரர் பெரியசாமிக்கு ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது கொடுக்கப்பட்டது.