நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இன்று நடைபெற்றது.
unknown nodeஇதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.இதன் பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 38 ஓவர்களில் 157 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன் மட்டும் 64 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் பந்துவீச்சில் முகமது சமி 3 விக்கெட்டுகளையும் ,குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
unknown nodeஇதையடுத்து 158 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி 34.5 ஓவர்களில் ரன்கள் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து அபார வெற்றிபெற்றது.இதன் மூலம் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.இந்திய அணியில் அதிகபட்சமாக தவான் 75* ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.