ஊருக்கே உணவளித்த தமிழக டெல்டா உணவு மற்றும் தண்ணீருக்காக ஏங்குகிறது...!ஹர்பஜன் சிங் உருக்கமான பதிவு

ஊருக்கே உணவளித்த தமிழக டெல்டா தற்போது உணவு மற்றும் தண்ணீருக்காக ஏங்குகிறது என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

ஊருக்கே உணவளித்த தமிழக டெல்டா தற்போது உணவு மற்றும் தண்ணீருக்காக ஏங்குகிறது என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கஜா புயல் டெல்டா மாவட்டங்களை ஒரு வழி செய்தது.குறிப்பாக இயற்கை வளங்கள் செழிப்பாக உள்ள மாவட்டங்கள் சிதைந்து கிடக்கிறது.தஞ்சை, நாகை, திருவாரூர்,புதுக்கோட்டை மாவட்டங்களில் சேதங்கள் பல ஆகும்.

unknown node

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில்,  ஊருக்கே உணவளித்த தமிழக டெல்டா தற்போது உணவு மற்றும் தண்ணீருக்காக ஏங்குகிறது.கஜா புயலால் துயரங்களை அனுபவிக்கும், நம் அன்பு நெஞ்சங்களுக்காக நாம் கரம் கோர்ப்போம், நம்மால் முடிந்ததை செய்வோம், உங்களோடு துணை நிற்பேன் தமிழகமே என்றும் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.