ஜெயிச்சு வந்துருக்கேன்னு சொல்லிக்கறேன் என்று தனது ட்விட்டரில் ஹர்பஜன் பதிவிட்டுள்ளார்.கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் பிரபலமான போட்டி ஐபிஎல் போட்டி.அடுத்த ஆண்டு நடைபெற உள்ள போட்டிக்கான ஏலம் டிசம்பர் மாதம் 19-ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.இதற்கு முன்னதாக 8 அணிகளும் அணியில் உள்ள வீரர்களை விடுவித்து கொள்ளலாம்.இந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.அதன்படி 5 வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வீரர்கள் விவரம் :
மோகித் சர்மா
சைதன்யா பிஸ்ரோய்
துருவ் சோரே
டேவிட் வில்லி
சம் பில்லிங்ஸ்
ஆனால் இந்த பட்டியலில் அனுபவ வீரர் ஹர்பஜன் சிங் இடம்பெறுவார் என்று தகவல் வெளியாகி வந்தது.ஆனால் அவர் பெயர் இடம் பெறவில்லை.
unknown node