இவர் நீண்ட நாள் அணியில் நீடிப்பாரா என்று நினைத்தேன்..!ஆனா இப்போம் ...!கபில்தேவ் புகழாரம்

பூம்ரா சர்வதேச போட்டிகளில்  சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுவருகிறார்  என்று  இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

பூம்ரா சர்வதேச போட்டிகளில்  சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுவருகிறார்  என்று  இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி மெல்போர்னில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற்றுள்ளது.

unknown node

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,பூம்ரா சர்வதேச போட்டிகளில்  சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுவருகிறார்.முதன்முறையாக அவரை நான் பார்த்தபோது, இவர் நீண்ட நாள் அணியில் நீடிப்பாரா என்று நினைத்தேன்.ஆனால் தற்போது  அதை பொய்யாக்கிவிட்டார். ஆஸ்திரேலியாவில் அவரது பந்துவீச்சு சிறப்பானதாக இருந்தது. அவரை பாராட்டுகிறேன். அவரது மனநிலை வலிமையானதாக இருக்கிறது. அவரிடம் சிறப்பு தோள்கள் இருக்கின்றது  என்று  இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.