உலகக் கோப்பையை வென்ற பிறகே திருமணம் முடிப்பேன்..!

ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கான் தனது திருமணத்தை பற்றி கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கான் தனது திருமணத்தை பற்றி கூறியுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் , ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் ரசிகர்களை சமூக வலைத்தளங்களில் உற்சாகப்படுத்தி வருகிறார்கள். மேலும் சில பேட்டிகளில் தங்களை பற்றி தெரியாத தகவலை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கான் சமீபத்தில் அளித்துள்ளார் பேட்டியில் சில சுவாரிஸ்யமான தகவலை கூறியுள்ளார், ஆம் ரசிகர் ஒருவர் அவரிடம் எப்பொழுது திருமணம் செய்துகொள்ள போகிறீர்கள் என்று கேட்டதற்கு சிரித்து கொண்டே ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பையை வென்ற பிறகு தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று குறியுள்ளார்.