சிறந்த கேப்டனாக ரோஹித் சர்மா! 2024ம் ஆண்டுக்கான சிறந்த டி20 அணியை அறிவித்த ஐசிசி!

இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

Rohit sharma caption

டெல்லி : சர்வதேச கிரிக்கெட் தலைமை நிர்வாகம் (ICC) 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர்களை தேர்வு செய்து இவர்கள் தான் சிறந்த அணி என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா, அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு காரணம் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் அணியை அசத்தலாக வழிநடத்தி கோப்பையை வென்று கொடுத்தது தான்.

அதைப்போல, ரோஹித்தை தவிர இந்தியாவிலிருந்து ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா அணியில் டிராவிஸ் ஹெட், இங்கிலாந்து அணியில் பிலிப் சால்ட், வெஸ்ட் இண்டீஸ் அணியில் நிக்கோலஸ் பூரன், பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், ஜிம்பாப்வே அணியில் சிக்கந்தர் ராசா, இலங்கை அணியில் வனிந்து ஹசரங்கா ஆப்கானிஸ்தான் அணியில் இருந்து ரஷீத் கான் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த டி20 அணி 2024 : ரோஹித் சர்மா (கேப்டன்), டிராவிஸ் ஹெட், பில் சால்ட், பாபர் ஆசம், நிக்கோலஸ் பூரன், சிக்கந்தர் ராசா, ஹர்திக் பாண்டியா, ரஷித் கான், வனிந்து ஹசரங்கா, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்

மேலும், இதற்கு முன்னதாக, 2024 ஆம் ஆண்டின் ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த அணியை ஐசிசி வெளியிட்டு இருந்தது. அதில் இந்திய வீரர்கள் பெயர் இடம்பெறாமல் இருந்த நிலையில், தற்போது டி20 அணியில் ரோகித் சர்மா(கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகிய 4 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

சிறந்த ஒரு நாள் அணி 2024 : 

இலங்கை அணியை சேர்ந்த சரித் அசலங்கா (கேப்டன்), சைம் அயூப் (பாகிஸ்தான்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (ஆப்கானிஸ்தான்), பாதும் நிஸ்ஸங்க (இலங்கை), குசல் மெண்டிஸ் (இலங்கை) – விக்கெட் கீப்பர், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் (வெஸ்ட் இண்டீஸ்), அஸ்மத்துல்லா ஓமர்சாய் (ஆப்கானிஸ்தான்), வனிந்து ஹசரங்கா (இலங்கை), ஷஹீன் ஷா அப்ரிடி (பாகிஸ்தான்), ஹாரிஸ் ரவூப் (பாகிஸ்தான்), ஏ.எம். கசன்ஃபர் (ஆப்கானிஸ்தான்) ஆகியோர் இடம்பெற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்