தோனி 7வது இடத்தில் இறங்கினால் சிஎஸ்கேவை வழிநடத்த முடியாது – கௌதம் கம்பீர் கருத்து..!!

Gautam Gambhir has said that Dhoni will not be able to lead CSK if he drops to 7th position

தோனி 7வது இடத்தில் இறங்கினால் சிஎஸ்கேவை வழிநடத்த முடியாது கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து இன்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை அணி வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்த நிலையில், சென்னை அணி கேப்டன் தோனி கடந்த ஆண்டிலிருந்து பேட்டிங்கில் 7வது இடத்தில் தான் இறங்கி விளையாடி வருகிறார். அதைபோல் கடந்த டெல்லிக்கு எதிரான போட்டியில் 7 வது இடத்தில இறங்கு டக் அவுட் ஆகி வெளியேரினார்.  இதற்காக பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது கௌதம் கம்பீர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி இதில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது,  தோனி 7 வது இடத்தில் பேட்டிங் செய்யதால் சிஎஸ்கேவை வழிநடத்த முடியாது. வரவிருக்கும் போட்டிகளில் சி.எஸ்.கே கேப்டன் 4 அல்லது 5 என்ற இடத்தில் பேட் செய்ய வேண்டும். தோனி பழைய தோனியாக இல்லை” என்றும் கூறியுள்ளார்  மேலும் இன்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோனி எப்போது இறங்குவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.