நான் மட்டும் தேர்வுகுழு தலைவரா இருந்திருந்தா...விராட் கோலியை ஓய்வுபெற விட்டிருக்க மாட்டேன் – திலீப் வெங்சர்க்கர்!

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பிறகு விராட் கோலியை ஓய்வு பெறச் சொல்லியிருப்பேன் என முன்னாள் கிரிக்கெட் வீரர் திலீப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.

Featured image

டெல்லி :முன்னாள் இந்திய கேப்டனும் தேர்வுக்குழு தலைவருமான திலீப் வெங்சர்க்கர், விராட் கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு முடிவு குறித்து தனது கருத்தை ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’விடம் தெரிவித்தார். “நான் இந்திய தேர்வுக்குழு தலைவராக இருந்திருந்தால், விராட் கோலியை இங்கிலாந்து தொடருக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுமாறு வற்புறுத்தியிருப்பேன். இந்தத் தொடரில் அவரது அனுபவமும் உயர்ந்த தரமான ஆட்டமும் இந்திய அணிக்கு மிகவும் தேவையாக இருந்திருக்கும்,” என்று அவர் கூறினார்.

வெங்சர்க்கர் மேலும் பேசுகையில், இங்கிலாந்தின் கடினமான ஆடுகள நிலைகளில் கோலியின் திறமையும் மனவலிமையும் அணிக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கும் என்று வலியுறுத்தினார். கோலியின் முந்தைய இங்கிலாந்து தொடர்களில், குறிப்பாக 2018-ல் 655 ரன்கள் குவித்து அசத்தியதை சுட்டிக்காட்டி, அவரது அனுபவம் இந்த 2025 தொடரில் இந்திய அணிக்கு முக்கியமாக இருந்திருக்கும் என்று தெரிவித்தார். “இந்தத் தொடரில் நாம் அவரது தரமான ஆட்டத்தையும், அனுபவத்தையும் தவறவிட்டோம்,” என்று அவர் கருத்து தெரிவித்தார்.

விராட் கோலி, 2025 ஐபிஎல் தொடரின் நடுவே, மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்த முடிவு, ரோஹித் சர்மாவின் டெஸ்ட் ஓய்வு அறிவிப்பைத் தொடர்ந்து வந்தது. இந்திய அணி, இளம் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இங்கிலாந்து தொடரில் 2-2 என்ற கணக்கில் டிரா செய்தாலும், வெங்சர்க்கர், கோலியின் பங்களிப்பு இல்லாதது அணியின் முதுகெலும்பை பலவீனப்படுத்தியிருக்கலாம் என்று கருதுகிறார்.

வெங்சர்க்கரின் இந்த கருத்து, கோலியின் ஓய்வு முடிவு முன்கூட்டியே எடுக்கப்பட்டதாகவும், இங்கிலாந்து தொடருக்கு அவரது அனுபவம் அவசியமாக இருந்திருக்கும் என்றும் வலியுறுத்துகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால டெஸ்ட் உத்திகளில் இளம் வீரர்களை நம்பியிருக்க வேண்டிய சூழலில், கோலியின் இடத்தை நிரப்புவது சவாலாக இருக்கும் என்று அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.