நான் வரவில்லை என்னை விடுங்க! ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ஆடம் ஸம்பா!
ஹைதராபாத் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸம்பா காயம் தீவிரமடைந்துள்ள காரணத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் விளையாட இரண்டு அணிகளும் தயாராகி வருகிறது. இந்த சூழலில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவர்களின் முன்னணி ஆஸ்திரேலிய லெக் ஸ்பின்னர் ஆடம் ஸம்பா மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
ஸம்பாவின் தோள்பட்டையில் ஏற்கனவே இருந்த காயம் மீண்டும் தீவிரமடைந்ததால், அவர் ஆஸ்திரேலியாவுக்கு திரும்பி மருத்துவ ஆலோசனை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதன் காரணமாக அவர் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகி மருத்துவ பரிசோதனையில் ஈடுபடவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஐபிஎல் 2025ன் ஆரம்ப இரண்டு போட்டிகளில் ஸம்பா SRH அணிக்காக இம்பாக்ட் வீரராக களமிறங்கினார்.
இரண்டு போட்டிகளிலும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார். பெரிய அளவில் அவர் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் கூட அணிக்கு தேவையான ஒரு சுழற்பந்துவீச்சாளராக இருந்தார். இந்த சூழலில் அவர் விளையாடமுடியாத சூழல் உருவாகியுள்ள காரணத்தால் ஹைதராபாத் அணிக்கு இது ஒரு பின்னடைவாக தான் பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் SRH அணி நிர்வாகம் ஸம்பாவுக்கு ஓய்வு அளித்து, அவர் மீண்டு வருவார் என நம்பியது. ஆனால், காயத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு விலகியுள்ளார்.
இதனால், ஸம்பா ஆஸ்திரேலியாவுக்கு திரும்பி, மருத்துவ சிகிச்சை பெற உள்ளார். மேலும், அவர் 2025 ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடர் வரை கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்க வேண்டியிருக்கும். மேலும். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஆடம் ஸம்பாவை ஹைதராபாத் அணி 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.