இந்தியா -பாகிஸ்தான் மோதல் ....!தலைதெறிக்க ஓடிய இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா...!ரசிகர்கள் அதிர்ச்சி

இந்தியா -பாகிஸ்தான் போட்டி குறித்து  இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா -பாகிஸ்தான் போட்டி குறித்து  இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி என்றாலே அனைவருக்கும் தனி ஆர்வம் தான். பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை நீண்ட நாட்களுக்கு பிறகு காண ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

2018 ஆசிய கோப்பை போட்டி யுனைடெட் அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அனைவரின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி இன்று நடைபெறுகிறது.  சாம்பியன்ஸ் ட்ராஃபிக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் மோதும் முதல் போட்டி இதுவாகும். இதுவரை ஆசிய கோப்பை போட்டியில் இந்த இரு அணிகளும் 12 முறை மோதியுள்ளது. அதில் இந்தியா 6 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் சந்தித்துளளது.

unknown node

இந்நிலையில் இந்த போட்டி குறித்து இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,   “இன்னும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பை போட்டிடிக்கு  நடைபெற 24 மணிநேரத்துக்கும் குறைவான நேரம்தான் உள்ளது. தற்போதே, சமூக வலைதளங்களில் இருந்து சில நாள்கள் விலகி இருப்பதுதான் எனக்குப் பாதுகாப்பானது. இங்கு பரிமாற்றப்படும் கருத்துகள் சாதாரணமாக இருப்பவரையே மனநோயாளி ஆக்கிவிடும். நான் கர்பிணி, என்னை விட்டுவிடுங்கள். எப்படியும் இது ஒரு கிரிக்கெட் மேட்ச் தானே!” என்று கூறியுள்ளார். பாகிஸ்தான்  கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக் தான் சானியா மிர்சாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node