மகளீர் டி-20 உலக கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது இந்திய அணி.
6-வது மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து அணியுடன், இந்திய அணி இன்று மோதியது. ஆண்டிகுவாவில் இந்த போட்டி, இந்திய நேரப்படி அதிகாலை நடைபெற்றது.
unknown nodeஅரையிறுதி போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. 113 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.இதன் மூலம் இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறியது.