வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது இந்தியா.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்தாலும், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதன் பின் பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 31.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்கள் மட்டுமே அடித்தது.
இந்திய அணியின் பந்துவீச்சில் ஜடேஜா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இதன் பின்னர் 105 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 14.5 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.இதன் மூலம் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.களத்தில் ரோகித் 63 *,கோலி 33* ரன்களுடன் இருந்தனர்.
இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது இந்தியா.