IRELAND VS INDIA:இந்திய அணி 143 ரன்களில் அபார வெற்றி!சாகல்,குல்தீப் சுழல் செம!

இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்று விளையாடுவதற்கு முன் அயர்லாந்துடன் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது.முதல் டி20 போட்டியில் இந்திய அணி 76

இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்று விளையாடுவதற்கு முன் அயர்லாந்துடன் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது.முதல் டி20 போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்று ஐயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்த போட்டியில் தோனி,தவான், புவனேஸ்வர் ,பூம்ரா ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

unknown node

இந்நிலையில் இதை தொடர்ந்து தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் ராகுல் களமிறங்கினர். ஆனால் விராட் கோலி 9 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இந்நிலையில் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 213 ரன்கள் அடித்துள்ளது.சுரேஷ் ரெய்னா 34 பந்துகளில் தனது 5 வது அரை சதத்தை பதிவு செய்தார் .இதேபோல் இந்திய அணியின் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 28 பந்துகளில் தனது 4 வது அரை சதத்தை பதிவு செய்தார்.

unknown node

ராகுல் 70 ரன்களிலும், ரெய்னா 69,ரோகித் 0 ரன்களிலும், விக்கெட்டை பறிகொடுத்தனர்.பாண்டே 21 ரன்களுடனும்,பாண்டியா 9 பந்துகளில் 4 சிக்சர்கள் ஒரு பவுண்டரி உதவியுடன் 32 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இறுதிவரை இருந்தனர்.

அயர்லாந்து அணி பந்துவீச்சில் கெவின் 3 மற்றும் சாஸ் ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

பின்னர் களமிறங்கிய அயர்லாந்து அணி 12.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும்  இழந்து 70 ரன்கள் மட்டுமே  அடித்தது.இதன் மூலம் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

unknown node

இந்திய அணியின் பந்துவீச்சில் சாஹால் மற்றும் குல்தீப் தலா 3 விக்கெட்டுகளும்,உமேஷ் 2 விக்கெட்டும்,பாண்டியா மற்றும் கவுல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன் மூலம்  அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி.