கடைசி 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. அதேபோல் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.ஒரு நாள் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றியும்,இரண்டாவது ஒருநாள் போட்டி சமனிலும் முடிந்தது.பின்னர் மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் பங்கேற்கிறது.
unknown nodeஇந்நிலையில் முதல் 2 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடைசி 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.இந்திய அணி வீரர்கள் விவரம்(கடைசி 3 ஒருநாள் போட்டிகள் ) :விராட் கோலி(கேப்டன் ), ரோகித் (துணை கேப்டன் ),தவான் ,ராயுடு,மனிஷ் பாண்டே ,பண்ட் ,தோனி ,குல்தீப்,ஜடேஜா,ஷர்துல் தாகூர், சாகல்,லோகேஷ் ராகுல் ,கலீல் அகமது,பூம்ரா,புவனேஸ்வர் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
unknown node