மூன்றாம் நாள் ஆட்டத்தில் தேநீர் இடைவேளையில் இந்திய அணி 86 ரன்கள் எடுத்துள்ளது.ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி20 தொடர்களுக்கு பிறகு தற்போது முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளது.அடிலெய்ட்டின் ஓவல் மைதானத்தில் தொடங்கிய இந்த ஆட்டத்தில், டாஸ்வென்று முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 250 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து ஆடி வந்த ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
unknown nodeஇதன் பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சை இந்திய அணி தொடங்கியது.மூன்றாம் நாள் ஆட்டத்தில் தேநீர் இடைவேளையில் இந்திய அணி 29 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்கள் எடுத்துள்ளது.களத்தில் புஜாரா 11,கோலி 2 ரன்களுடன் உள்ளனர்.ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் ஸ்டார்க் ,ஹேசல்வுட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.