இந்தியா-வங்கதேசம் இடையேயான 2-வது டெஸ்டில் வங்கதேச அணி, இரண்டாவது நாள் முடிவில் 7/0 ரன்கள் குவிப்பு.
நேற்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கும், இந்தியா 314 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது.
இந்தியா, வங்கதேசத்தை விட முதல் இன்னிங்சில் 87 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய வங்கதேச அணி 2-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் குவித்துள்ளது.