இந்தியா-வங்கதேசம் இடையேயான 2-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 314 ரன்களுக்கு ஆல் அவுட்.
நேற்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
வங்கதேச அணியில் அதிகபட்சமாக மொமினுல் ஹக் 84 ரன்களும், இந்திய அணி சார்பில் அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் தலா 4 விக்கெட்களும், வீழ்த்தினர். தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் ரிஷப் பந்த்(93) மற்றும் ஷ்ரேயஸ் ஐயர்(87) ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 314 ரன்கள் குவித்தது.
வங்கதேச அணி தரப்பில் ஷகிப் அல் ஹசன் மற்றும் டைஜூல் இஸ்லாம் தலா 4 விக்கெட்கள் வீழ்த்தினர்.