#INDvsENG : ராஜ்கோட்டில் நடைபெறவுள்ள 3வது டெஸ்டில் இருந்து கே.எல்.ராகுல் விலகல்

பிப்ரவரி 15 ஆம் தேதி ராஜ்கோட்டில் தொடங்கவிருக்கும் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்

Featured image

பிப்ரவரி 15 ஆம் தேதி ராஜ்கோட்டில் தொடங்கவிருக்கும் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் விலகியுள்ளார். அவருக்கு பதில் இந்திய இளம் வீரர் தேவதூத் படிக்கல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரானது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்து வருகிறது.

இந்தியாவின் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரர் காலமானார் ..!

இதற்கு முன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில்  காயம் காரணமாக கே.எல்.ராகுல் இடம் பெறவில்லை. ஏற்கனவே, தனிப்பட்ட காரணத்திற்காக விராட் கோலியும் இந்த தொடரிலிருந்து வெளியேறினார். ஷ்ரேயஸ் ஐயரும் தனது டெஸ்ட் கிரிக்கெட்டின் மோசமான பார்ம் காரணமாக சேர்க்கப்படாமல் இருந்தார்.

இந்நிலையில், நேற்று காலை ராகுல் பயிற்சியில் ஈடு பட உள்ளார் என தகவல்கள் வெளியானது. மேலும், 3 வது  டெஸ்டில் கோலிக்கு பதிலாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே காயத்தால் தான் அவர் 2வது  டெஸ்டில் விளையாடாமல் இருந்தார், அதை தொடர்ந்து அவரது முட்டி பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அதனால் 3 வது டெஸ்டிலும் ராகுல் விளையாடமாட்டார் எனவும் உறுதி ஆகியுள்ளது.

அவருக்கு பதிலாக ஐபிஎல் நட்சத்திர வீரரும், இந்தியாவின் இளம் வீரருமான தேவதூத் படிக்கல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தேவதூத் படிக்கல் தற்போது ரஞ்சிக் கோப்பையில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். கர்நாடக அணிக்காக விளையாடி வரும் அவர் தமிழ்நாடு அணிக்கு எதிராக 151 ரன்கள் விளாசியுள்ளார். அதே போல இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இந்தியா ஏ அணிக்காக தேவதூத் படிக்கல் 105 ரன்கள் அடித்திருந்தார்.  நடப்பு ரஞ்சி தொடரில் படிக்கல் 556 ரன்கள் அடித்திருக்கிறார்.

முதல் முறையாக தேவதூத்  படிக்கல் இந்திய அணிக்காக டெஸ்ட் அணியில் இடம்பெற்றுகிறார்.  இவர் இதுவரை  31 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில்  227 ரன்கள் அடித்திருக்கிறார். இவரது சராசரி (Average) 44.54 ஆகும். மேலும், இந்திய அணிக்காக இரண்டு சர்வதேச T20 போட்டியில் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.