ஓய்வை அறிவித்தார் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.!

James Anderson : டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அறிவித்துள்ளார்.

James Anderson

James Anderson: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், வருகின்ற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான லார்ட்ஸில் நடைபெறும் மூன்று ஆட்டங்கள் கொண்ட தொடரின் முதல் போட்டிக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

ஆண்டர்சன் 20 வருடங்கள் இங்கிலாந்து அணியில் விளையாடி வரும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 187 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஓய்வு குறித்து தந்து சமூக வலைத்தள பக்கத்தில், “இந்த கோடைக்காலத்தில் லாட்ஸ் மைதானத்தில் விளையாடும் டெஸ்ட் போட்டியே எனது கடைசி போட்டி என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இங்கிலாந்து அணிக்காக இனி விளையாட முடியாது என்பதை நினைத்து வருந்துகிறேன். ஆனால் ஓய்வு பெறுவதற்கு சரியான நேரம் இதுதான் என நான் நினைக்கிறேன். என்னுடைய கனவை போல் மற்றவர்களின் கனவுகளும் நனவாகட்டும், சிறுவயதிலிருந்து நேசித்த விளையாட்டை 20 வருடங்கள் நாட்டிற்காக பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளேன். அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்திருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by James Anderson (@jimmya9)