2-வது டெஸ்டில் ஜோஃப்ரா ஆர்ச்சர் இல்லை..!

Jobra Archer withdraws from 2nd Test due to injury

காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 2-வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகல்.

இங்கிலாந்து -இந்திய அணிகளுக்கு இடையே தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் நாளை தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். காயம் பெரிதாக இல்லையெனவும் தற்போது வழங்கப்பட்டு வரும் சிகிச்சை மூலம் விரைவில் குணமடைந்து விடுவார். அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் களமிறங்குவார் என இங்கிலாந்து கிரிக்கெட் அணி தெரிவித்துள்ளார்.

மேலும், நாளைய போட்டியில் ஷாபாஸ் நதீம் பதிலாக இந்திய அணியில் குல்தீப் யாதவ் இடப்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நதீம் முதல் டெஸ்ட் போட்டியில் 233 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.