KKR vs GT : வெற்றி பாதைக்கு திரும்புமா கொல்கத்தா? குஜராத்திற்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாட உள்ளன. இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.
7 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி பெற்று சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் இடத்திலும், 7 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றி கண்டு ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7வது இடத்திலும் உள்ளது. சொந்த மைதானத்தில் விளையாடி கொல்கத்தா அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முன்னேற துடிக்கும். அதே போல குஜராத் அணி விரைவாக பிளே ஆப் தகுதி சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் விளையாடும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் ரஹானே பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ அணி பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :
ரஹானே தலைமையில் ரஹ்மானுல்லா குர்பாஸ்(விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், மொயின் அலி, ஆண்ட்ரே ரசல், ரமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் விளையாட உள்ளனர்.
குஜராத் டைட்டன்ஸ் :
சுப்மன் கில் தலைமையில் சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ராகுல் தெவாடியா, வாஷிங்டன் சுந்தர், ஷாருக் கான், ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் ஆகியோர் விளையாட உள்ளனர்.