“CSK இப்படி தடுமாறியதை நான் பார்த்ததே இல்லை! ” சுரேஷ் ரெய்னா வேதனை!
நடப்பு ஐபிஎல் தொடரில் CSK அணி நிர்வாகம் முறையாக வீரர்களை தேர்வு செய்யவில்லை. CSK இவ்வளவு தடுமாறியதை நான் பார்த்ததே இல்லை என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி 6-ல் தோல்வி கண்டு, 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடமான 10வது இடத்தில் உள்ளது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
CSK அணி இனி விளையாடும் 6 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதுவும் அதிக ரன் ரேட் பெற வேண்டும். மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளும் CSK பிளே ஆஃப்-ல் முக்கிய பங்காற்றும். இதனால் இந்த சீசனில் முதல் அணியாக வெளியேறும் அணியாக CSK அணி இருக்குமோ என்ற வருத்தத்தில் CSK ரசிகர்கள் உள்ளனர்.
CSK அணியின் தற்போதைய நிலை குறித்து CSK அணியின் முன்னாள் வீரரும், ரசிகர்களால் ‘சின்ன தல’ என அன்போடு அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா வருத்தத்துடன் தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், “CSK பயிற்சியாளர் மற்றும் நிர்வாகத்தால் இந்த ஐபிஎல் சீசனில் ஏலத்தில் சரியான வீரர்களை எடுக்கவில்லை என்று நான் உணர்கிறேன். ஏலத்தில் பல திறமையான வீரர்கள் இருந்தனர், பிரயன்ஷ் ஆர்யா போன்ற திறமையான இளம் வீரர்கள் இருந்தனர். இவ்வளவு பணம் வைத்துக்கொண்டு சரியாக திட்டமிடாமல் ரிஷப் பண்டை விட்டுவிட்டார்கள். ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் ஆகியோரை விட்டுவிட்டனர். மற்ற அணிகள் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆடுகிறார்கள். இதுவரை நடந்த ஐபிஎல்சீசனில் CSK இவ்வளவு தடுமாறி நான் பார்த்ததேயில்லை.” என சுரேஷ் ரெய்னா தனது ஆதங்கத்தை தனியார் செய்தியாளர் நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத்தினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025