பஞ்சாப் கிங்ஸ் பவர் என்னன்னு தெரியாம விட்டுடிங்க…புகழ்ந்து தள்ளிய கவாஸ்கர்!

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ், 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

shreyas iyer

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பஞ்சாப், குஜராத், பெங்களூர், மும்பை ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. இதில், பஞ்சாப் அணியும் மும்பை அணியும் நேற்று நடைபெற்ற போட்டியில் மோதிய நிலையில், ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்ற நிலையில், இந்த போட்டியில் பஞ்சாப் வெற்றிபெற்றதன் மூலம் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது.

இந்த அளவுக்கு பஞ்சாப் அணி சிறப்பாக விளையாடி இருக்கும் நிலையில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.அந்த வகையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், ஐபிஎல் 2025 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் அபாரமான செயல்பாட்டைப் பாராட்டி பேசியிருக்கிறார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசும்போது ” யாருமே பஞ்சாப் கிங்ஸை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை, ஆனால் ஷ்ரேயாஸ் ஐயரின் அற்புதமான கேப்டன்சி காரணமாக பஞ்சாப் மிகவும் சிறப்பாக விளையாடி இருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். கேகேஆர் 2024-இல் வெற்றி பெற்றபோது, ஷ்ரேயாஸுக்கு உரிய பாராட்டு கிடைக்கவில்லை.

ஏனென்றால், எல்லாப் புகழும் வேறு ஒருவருக்குச் சென்றது. ஆனால், இந்த ஆண்டு பஞ்சாபில், அவருக்கு நியாயமான அங்கீகாரம் கிடைக்கிறது.  இதனை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. களத்தில் முக்கியப் பங்கு வகிப்பது கேப்டன்தான், டக்அவுட்டில் உட்கார்ந்திருப்பவர் அல்ல. பலரும் ஷ்ரேயாஸ் ஐயரின் தோல்வியை மட்டும் தான் பார்கிறார்கள்.

அவருடைய வெற்றிகளை யாரும் மதிப்பிட்டு பேசுவது இல்லை. இதற்கு என்ன காரணம் என்று எனக்கு புரியவில்லை. அவருடைய வெற்றிகள் மூலம் அவர் இன்னும் பெரிய இடத்திற்கு செல்வார்” எனவும் சுனில் கவாஸ்கர்பாராட்டி பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்