இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவோம் – டேவிட் வார்னர்..!!

Sunrisers captain David Warner said after the match yesterday that they will play better in the upcoming matches.

இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவோம் என்று சன்ரைசர்ஸ் அணி கேப்டன் டேவிட் வார்னர்  நேற்று போட்டி முடிந்தவுடன் கூறியுள்ளார்.

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.3 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றியை தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

இந்த நிலையில் போட்டி முடிந்தவுடன் பேசிய சன்ரைசர்ஸ் அணி கேப்டன் டேவிட் வார்னர் கூறியது ” நாங்கள் வருகின்ற போட்டியில் சிறப்பாக விளையாடுவோம். இந்த போட்டியில் தோல்வியடைந்த முழு காரணத்தை நானே ஏற்றுக்கொள்கிறேன். மனிஷ் பாண்டே மிகவும் சிறப்பாக விளையாடினர். அதைபோல் கடைசி நேரத்தில் வில்லியம்சன் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். 170 ரன்கள் என்பது ஓரளவுக்கு நல்ல ஸ்கோர்தான். பவர் பிளேவில் நாங்கள் விக்கெட் வீழ்த்தவில்லை. இதனால், பேட்ஸ்மேன்கள் அழுத்தங்கள் இல்லாமல் விளையாடினர். வரும் போட்டிகளில் எங்கள் தவறுகளை திருத்திவிட்டு சிறப்பாக விளையாடுவோம்” என்றும் கூறியுள்ளார்.