சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து மிட்செல் ஸ்டார்க் ஓய்வு.!

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

MitchellStarc -cricket

ஆஸ்திரேலியா :ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதான ஸ்டார்க், 65 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 2021 டி20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் முக்கிய உறுப்பினராக இருந்தார்.

இதுவரை 65 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டார்க், 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இருப்பினும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் எனத் தெரிவித்துள்ள மிட்செல் ஸ்டார்க் டெஸ்ட் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் பட்டத்தை வெல்ல குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய வீரர்களில் ஸ்டார்க் ஒருவர். நீண்ட காலமாக, அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை தனது முன்னுரிமையாகக் கருதி வருகிறார்.

ஸ்டார்க் தனது துல்லியமான யார்க்கர் மற்றும் ஸ்விங் பந்துவீச்சால் பேட்ஸ்மேன்களை திணறடித்தவர், மேலும் 2015 மற்றும் 2023 உலகக் கோப்பைகளில் ஆஸ்திரேலியாவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியவர். இவரது ஓய்வு முடிவு ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

ஆம், ஸ்டார்க்கின் இந்த முடிவிற்குப் பிறகு, சீன் அபோட், பென் டுவார்ஷுயிஸ் மற்றும் சேவியர் பார்ட்லெட் போன்ற இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆஸ்திரேலியாவின் வெள்ளை பந்து அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது.