இவுங்க 2 பேரு தான் ஓப்பனிங் இறங்கணும்! சஞ்சு சாம்சனை தேர்வு செய்யாத அஸ்வின்!

சுப்மன் கில், அபிஷேக் சர்மா இருவரும் இன்று நடைபெறும் போட்டியில் தொடக்க வீரர்களாக விளையாட வேணும் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ashwin abou sanju samson

அபுதாபி :2025 ஆசியக் கோப்பையில் இந்தியாவின் முதல் போட்டி செப்டம்பர் 10, 2025 அன்று துபாயில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) எதிராக நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு முன்னதாக முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், இந்திய அணியின் முதல் 11 வீரர்களை தேர்ந்தெடுத்தார். ஆனால், அவரது தேர்வில் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை, இது ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் டி20 வடிவத்தில் 3 சதங்கள் அடித்து சிறப்பாக ஆடி வரும் சாம்சனை, அஷ்வின் ஒதுக்கியதால், அவரது தேர்வு முடிவு பலரை ஆச்சரியப்படுத்தியது.அஷ்வின், தொடக்க வீரர்களாக ஷுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மாவை தேர்வு செய்தார். “கில் மற்றும் அபிஷேக் தொடக்க ஜோடி பயமுறுத்தும் அளவுக்கு வலுவானது. கில் ஒரு ரன் இயந்திரம், குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டிலும் பெரிய இன்னிங்ஸ் ஆடக்கூடியவர். அபிஷேக் ஒரு பக்கம் வேகமாக ரன்கள் சேர்ப்பார், கில் அணியை இணைக்கும் ஒட்டு மாதிரி இருப்பார். அவர் 55 பந்துகளில் சதம் அடிக்கும் திறன் கொண்டவர்,” என்று அஷ்வின் விளக்கினார்.

கில், டி20 அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டவர் மற்றும் ஐபிஎல்-ல் வேகமாக ரன்கள் குவிக்கும் திறனை காட்டியவர். இது அவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதற்கு காரணமாக இருக்கலாம்.அஷ்வினின் அணியில் சிவம் துபே மற்றும் ரிங்கு சிங் ஆகியோரும் இடம்பெறவில்லை. மாறாக, விக்கெட் கீப்பராக ஜீதேஷ் ஷர்மாவையும், பந்துவீச்சாளர்களாக குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஜாஸ்பிரித் பும்ரா ஆகியோரை தேர்ந்தெடுத்தார்.

அவர் தேர்வு செய்த வீரர்கள்:சுப்மன் கில், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஜீதேஷ் ஷர்மா, ஹார்திக் பாண்ட்யா, அக்ஸர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜாஸ்பிரித் பும்ரா சூர்யகுமார் யாதவ்,

போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பில் சாம்சனின் அணியில் இடம் குறித்து தெளிவாக பதிலளிக்கவில்லை, எனவே, அவர் இன்றயை போட்டியில், விளையாடுவாரா இல்லையா என்பது தெரியாத ஒரு விஷயமாக இருந்து வரும் சூழலில், அவரை அஸ்வின் தேர்வு செய்யாதது பேசுபொருளாக மாறியுள்ளது. சாம்சன் ரசிகர்கள் பலரும் சஞ்சுவை எதற்கு தேர்வு செய்யவில்லை? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.