பாண்டியா, கே.எல். ராகுலுக்கு விதிக்கப்பட்ட தடை இந்திய அணியை நிச்சயம் பாதிக்கும் -விராட் கோலி

ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தடை, இந்திய அணியை நிச்சயம் பாதிக்கும் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தடை, இந்திய அணியை நிச்சயம் பாதிக்கும் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில்  தொடரை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்ததுள்ளது.

மேலும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது தான் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.இந்த வெற்றியை விராட் கோலி தலைமையிலான இந்திய படைகள் பிசிசிஐயின் 71 ஆண்டுகால தாகத்தை தீர்த்ததுள்ளது.மேலும் உற்சாகத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டது.

இதன் பின் இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை (ஜனவரி 12-ம் தேதி) நடைபெற இருக்கிறது.இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி நாளை  காலை 7.50 மணிக்கு தொடங்குகிறது.

unknown node

இந்நிலையில் அதற்கு முன்  இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில்,  ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தடை, இந்திய அணியை நிச்சயம் பாதிக்கும்.ஹர்திக் பாண்டியா போன்ற ஆல் ரவுண்டர் இல்லை என்றால் அதனை ஈடு கட்ட சில மாற்றங்களை செய்வது அவசியம். இதனால் அணிக்கு பாதிப்பு என்றாலும், நடந்ததை மாற்ற முடியாது . சூழ்நிலை எப்படி இருந்தாலும், போட்டியில் வெற்றிக்காக போராடுவோம் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.