சென்னை அணி வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்..! சிஎஸ்கே அறிவிப்பு.!

The match between Chennai Super Kings and Rajasthan Royals, which was scheduled to take place tomorrow, has been postponed

ஐபிஎல் விதிகளின் படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியார் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதால் கொல்கத்தா- பெங்களூர் இடையேயான போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

அதைபோல் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகள் 2 பேர் உட்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது அணியின் சி.இ.ஓ. காசி விஷ்வநாதன் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி மற்றும் வீரர்கள் செல்லும் பேருந்தின் கிளீனர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்வீட்டர் பக்கத்தில்இது  “சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலிங் கோச் லட்சுமிபதி பாலாஜி மற்றும் டிராவல் சப்போர்ட் ஸ்டாஃபின் ஒரு உறுப்பினருக்கும் கடந்த 2 ஆம் தேதி டெல்லியில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் ஐபிஎல் விதிகளின் படி அணி வீரர்கள்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.

unknown node