இந்திய அணி ,வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் சுற்று பயணம் மேற்கொண்டு 3 டி 20 , 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.முதலில் நடைபெற்ற டி 20 , ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
வருகின்ற 22-ம் தேதி டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.இதற்கான 3 நாள் கொண்ட பயிற்சி போட்டி நேற்று தொடங்கியது.கேப்டன் கோலிக்கு விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது.இதனால் கேப்டன் பெறுப்பை ரஹானே ஏற்று உள்ளார்.
unknown nodeடாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் ,லோகேஷ் ராகுல் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே மயங்க் அகர்வால் 12 , லோகேஷ் ராகுல் 36 ரன்னிலும் வெளியேறினர்.
பின்னர் களமிறங்கிய ரஹானே 1 ரன்னில் வெளியேறினர்.இதை தொடர்ந்து நிலைத்து நின்ற ரோஹித் மற்றும் புஜாரா இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.சிறப்பாக விளையாடிய ரோஹித் 68 ரன்கள் குவித்தார்.
unknown nodeநிதானமாக விளையாடிய புஜாரா சதம் விளாசினார்.பின்னர் ரிடையர் ஹர்ட் முறையில் வெளியேறினர்.நேற்றைய ஆட்டமுடிவில் இந்திய அணி 5 விக்கெட்டை இழந்து 297 ரன்கள் குவித்தனர். களத்தில் விஹரி , ஜடேஜா இருவரும் களத்தில் நின்றனர்.