சமீப காலமாக ட்விட்டரில் பல ஹாஸ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் சமூக வலைத்தளவாசிகள்.அந்த வகையில் நேற்று ட்விட்டரில் நேட்டீசன்கள்#PrayForNesamaniஎன்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.இந்தியா மற்றும் சென்னை ட்ரெண்டிங்கில் முதல் இடத்திலும் மற்றும் உலக அளவில்#Pray_For_Neasamaniட்ரெண்டானது.இது தொடர்பாக பல பிரபலங்களும் ட்விட்டரில் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்து மிகவும் பிரபலமானவர். அவர் பதிவிடும் ட்விட் அனைவரின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெரும்.அந்த வகையில்#Pray_For_Neasamaniஹாஸ்டேக் தொடர்பாக ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
என் இனிய நண்பன் நேசமணிக்கு எனது மஞ்சள் நிற டர்பன் மீது அதீத பிரியம் உண்டு. இன்று மட்டும் அவன் அதை அணிந்திருந்தால்…ட்ச்! மீண்டு வா நேசா! #Pray_For_Neasamani ???? pic.twitter.com/zGfVbwwrGM
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 30, 2019
அவர் பதிவிட்ட பதிவில்,என் இனிய நண்பன் நேசமணிக்கு எனது மஞ்சள் நிற டர்பன் மீது அதீத பிரியம் உண்டு. இன்று மட்டும் அவன் அதை அணிந்திருந்தால்…ட்ச்! மீண்டு வா நேசா என்று பதிவிட்டுள்ளார்.