ரோஹித் ரொம்ப நாள் கழிச்சு வராரு..பசியுடனும் இருப்பார்! தினேஷ் கார்த்திக் பேச்சு!

ரோஹித் சர்மாவின் பேட்ஸ்மேனை பார்க்க நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

Rohit Sharma

டெல்லி :முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், ஆஸ்திரேலியா ODI தொடருக்கு முன் ரோஹித் சர்மாவின் பங்கைப் பற்றி உற்சாகமாக பேசியுள்ளார். சமீபத்தில் ODI கேப்டன்சி பொறுப்பை சுப்மன் கிலுக்கு ஒப்படைத்த ரோஹித், இப்போது சிறப்பு பேட்ஸ்மேனாக அணியில் இடம்பெறுகிறார். கார்த்திக், ரோஹித்தின் பவர்ப்ளேயில் தாக்குதல் நிறைந்த பேட்டிங் அணிக்கு வலிமையான தொடக்கத்தை அளிப்பதாக பாராட்டினார்.

இந்த தொடர், ரோஹித்தின் பேட்டிங் திறமையை மீண்டும் சோதிக்கும் வாய்ப்பாக அமையும் என்று அவர் நம்புகிறார். கார்த்திக், ரோஹித்தின் பேட்டிங் பாணியை “இயக்கத்தில் கவிதை” என்று போற்றினார். “ஃபார்மில் இருக்கும் போது, பவுலர்களை பயமின்றி எதிர்கொண்டு, அணிக்கு வலிமையான அடித்தளம் அமைக்கிறார். ரோஹித் முன்பை விட அழகாக வளர்ச்சி அடைந்துள்ளார். இப்போது சாதனைகளுக்காக மட்டும் விளையாடுவதில்லை, அணியின் தொனியை அமைக்கிறார். அந்த தியாக உணர்வு புதுமையானது” என்று கூறினார்.

2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ரோஹிதின் தொடக்க பேட்டிங், இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் கொண்டு வரும் பங்களிப்பை வெளிப்படுத்தியதாக கார்த்திக் சுட்டிக்காட்டினார்.கார்த்திக், ரோஹித் சிறப்பு பேட்ஸ்மேனாக மிகவும் மதிப்புள்ளவர் என்று உறுதியாகக் கூறினார். “2027 தென்னாப்பிரிக்க உலகக் கோப்பை தொலைவில் உள்ளது, ஆனால் அவர் மனதைப் போட்டால், உடற்தகுதியைத் தக்கவைத்தால், தயாராக இருப்பார். பிரேக்குக்குப் பின் திரும்பி வருவது, அவரது வாழ்க்கையில் இல்லாதது – அது அவரை புதுப்பித்து, பசியுடன் ஆட வைக்கும்” என்று அவர் சேர்த்தார்.

இந்த ODI தொடர், ரோஹிதின் புதிய பங்கை சோதிக்கும் முக்கிய சந்தர்ப்பமாக அமையும்.ரோஹிதின் திரும்பி வருகை, இந்திய ODI அணிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று கார்த்திக் நம்புகிறார். சுப்மன் கில்லின் தலைமையில், ரோஹித் போன்ற அனுபவ வீரர்கள் அணியின் சமநிலையை உறுதிப்படுத்துவார்கள். கார்த்திக், Cricbuzz-இல் பேசியதாகக் கூறப்படுகிறது. வரும் அக்டோபர் 19-ஆம் தேதி ஆஸ்ரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.