Ireland vs India:ஹிட்-மேன் ரோகித் சர்மா 15 வது அரை சதம்!

அயர்லாந்துடன் இந்திய அணி இரண்டு 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது.

அயர்லாந்துடன் இந்திய அணி இரண்டு 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது.

unknown node

இதன்படி இந்தியா-அயர்லாந்து மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி டப்ளின் நகரில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்று ஐயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்நிலையில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.

இந்த தொடக்க ஜோடி 13 ஓவர்களில் 122 ரன்களை அடித்துள்ளது.இதில் தவான் 27 பந்துகளில் அரைசதம் அடித்து 59 ரன்கள் அடித்துள்ளார்.

பின்னர் ரோகித் சர்மா 39 பந்துகளில் தனது 15 வது அரை சதத்தை பூர்த்தி செய்தனர்.  ரோகித் 57 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.