தொடர் தோல்வி எதிரொலி ! கேப்டன் பதவியில் இருந்து சர்பராஸ் அகமது திடீர் நீக்கம்

பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் மற்றும் டி-20 கேப்டன் பதவியில் இருந்து சர்பராஸ் அகமது நீக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடியது. இதில் டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் இலங்கை அணியிடம் தோல்வியை தழுவியது.ஆனால் ஒரு நாள் போட்டியில் மட்டும் 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. ஆனால் டி20 போட்டியில் ஒரு போட்டியில் கூட பாகிஸ்தான் அணி வெற்றி பெறவில்லை.இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் பலர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
கேப்டன் பதவியில் இருந்து சர்பராஸ் அகமதுவை நீக்க வேண்டும் என்ற பேச்சு அதிகம் உலவி வந்தது. இதற்கு முன் உலக கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து வெளியேறியது.அப்போதும் கேப்டன் சர்பராஸ் அகமது கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்தது.
இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் மற்றும் டி-20 கேப்டன் பதவியில் இருந்து சர்பராஸ் அகமது நீக்கப்பட்டுள்ளார்.இவர் நீக்கப்பட்ட நிலையில் அசார் அலி டெஸ்ட் கேப்டனாவும் ,பாபர் அசாம் டி-20 கேப்டனாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025