ரிஷப் பண்ட் ஓப்பனிங் செய்ய வேண்டுமா? டென்ஷனான கேவின் பீட்டர்சன்!

LSG கேப்டன் ரிஷப் பண்ட் தனது முன்னாள் ஐபிஎல் அணிக்கு எதிராக மிட்செல் மார்ஷுடன் இணைந்து தொடக்க ஆட்டக்கார வீரராக களமிறங்கியது விவாதமாக வெடித்துள்ளது.

Hero Image

லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ் (LSG) அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தனது பேட்டிங் பொசிஷனை மாற்றியதற்கு முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கேவின் பீட்டர்சன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.2026 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற லக்னோ அணியின் தோல்விக்கு பண்டின் ஓப்பனிங் பேட்டிங் ஒரு முக்கிய காரணம் என்று பீட்டர்சன் கருதுகிறார்.

போட்டியின்போது, ரிஷப் பண்ட் தனது முன்னாள் அணியான டெல்லிக்கு எதிராக மிட்செல் மார்ஷுடன் இணைந்து ஓப்பனிங் செய்தார். ஆனால் 7 ரன்களில் ரன் அவுட் ஆகி ஏமாற்றத்தை ஏற்படுத்தினார். கடந்த சீசனில் பண்ட் மிடில் ஆர்டரில் (முக்கியமாக நம்பர் 3 அல்லது 4-ல்) பேட்டிங் செய்து வந்த நிலையில், இந்த சீசனில் திடீரென ஓப்பனிங் செய்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஐபிஎல் ஒளிபரப்பாளராகப் பணியாற்றும் கேவின் பீட்டர்சன், JioHotstar-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:“லக்னோ அணியின் பேட்டிங் ஆழத்தையும் வலிமையையும் பார்க்கும்போது, ரிஷப் பண்ட் உண்மையில் ஓப்பனரா? கடந்த சீசனில் அவர் ஆர்டரில் கொஞ்சம் கீழே இறங்கி பேட்டிங் செய்தார். இப்போது திடீரென டாப்-ஆர்டருக்கு வந்திருக்கிறார். இது அவருக்கு சற்று அதிகமாகிவிட்டது என்று நினைக்கிறேன்.அவர் தனது கிரிக்கெட்டை வெறுமனே அனுபவிக்க வேண்டும்.

நம்பர் 3 பொசிஷனின் சுகத்தை அனுபவிக்கட்டும். ஓப்பனிங் செய்ய முயற்சிப்பதன் மூலம் அவர் தனக்கு தானே பெரும் அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்.”பீட்டர்சன் மேலும் கூறுகையில், “லக்னோ அணியில் மிட்செல் மார்ஷ் மற்றும் ஏடன் மார்க்ரம் போன்ற வலுவான ஓப்பனர்கள் இருக்கும்போது, பண்ட் ஓப்பனிங் செய்ய வேண்டிய அவசியம் என்ன?” என்றும் கேள்வி எழுப்பினார்.

கடந்த சீசனில் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய பண்ட், இந்த சீசனில் கேப்டனாகவும் இருப்பதால் பொறுப்புணர்வுடன் ஓப்பனிங் செய்ய முயற்சிப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால் இந்த முடிவு போட்டியின் தொடக்கத்திலேயே லக்னோ அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியதாக பீட்டர்சன் சுட்டிக்காட்டினார்.இந்த விமர்சனம் ஐபிஎல் 2026 தொடரின் ஆரம்ப நாட்களிலேயே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிஷப் பண்டின் பேட்டிங் பொசிஷன் குறித்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.