ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே. இவருக்கு வயது 52. இவர் தாய்லாந்தில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக உயிரிழந்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் மிக சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.
இவரது மறைவு குறித்து கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நான் உண்மையில் இங்கே வார்த்தைகளை இழந்துவிட்டேன், இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. எங்கள் விளையாட்டின் ஒரு முழுமையான புராணக்கதை மற்றும் சாம்பியன் எங்களை விட்டுச் சென்றுவிட்டார். RIP ஷேன் வார்னே….இன்னும் நம்ப முடியவில்லை’ என பதிவிட்டுள்ளார்.
unknown node