2019 ஆண்டுக்கான பெண்கள் T20 ஓவர் சேல்ஞ்ச் கிரிக்கெட் போட்டியானது ஜெய்ப்பூரில் நடைபெற்றது.இதில் மூன்று அணிகள் கலந்து கொண்டது.அதன்படி இறுதி போட்டியானது நேற்று நடைபெற்றது.
unknown nodeஇதில் மிதாலி ராஜ் தலைமையிலான வெலாசிட்டி அணியும் ,ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணியும் மோதியது.அதில் டாஸ் வென்ற சூப்பர் நோவாஸ் பீல்டிங்கை தேர்வு செய்தது.
unknown nodeஅதன்படி பேட்டிங்கில் களமிறங்கிய வெலாசிட்டி அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது.இதனால் 121 ரன்கள் இலக்காக சூப்பர் நோவாஸ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.இதனால் களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
unknown node51 ரன்களுடன் களத்தில் இருந்த ஹர்மன் பிரீத் கவுர் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.போட்டியின் தொடர் நாயகியாக ஜெமிமா ரோடிகசும் தேர்வு செய்யப்பட்டனர்.