இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணி இடையிலான இரண்டாவது டி 20 போட்டி இன்று புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறுகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
unknown nodeஇந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா , ஷிகர் தவான் இருவரும் களம் இறங்கினார். ஆட்டம் தொடக்கத்திலிருந்து நிதானமாக விளையாடிய இருவரும் அணியின் ரன்களை உயர்த்தினர்.
unknown nodeசிறப்பாக விளையாடி வந்த ஷிகர் தவான் 23 ரன்களில் வெளியேறினார். பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். அதிரடியாக விளையாடி வந்த ரோகித் சர்மா அரைசதம் நிறைவு செய்து 67 ரன்னில் அவுட் ஆனார். பிறகு கோலி 28 ரன்னில் வெளியேற அடுத்தடுத்து இறங்கிய ரிஷாப் பந்த் 4 , மனீஷ் பாண்டே 6 என சொற்ப ரன்களில் வெளியேறினார்.
unknown nodeஇறுதியாக இந்திய அணி 5 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் அடித்தது வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஓஷேன் தாமஸ் ,ஷெல்டன் கோட்ரெல் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். 168 ரன்கள் இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்க உள்ளது.