ஆணாக இருந்து பெண்ணாக மாறிய பிரபல கிரிக்கெட் வீரரின் மகன்?

முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கரின் ஆர்யன் தான் ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக் கொண்டு பெண்ணாக மாறியதை புகைப்படம் எடுத்து வெளியீட்டு அறிவித்து இருக்கிறார்.

sanjay bangar son aryan

மும்பை :இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஹார்மோன் மாற்ற அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறி தனது வாழ்க்கையில் புதிய பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். அந்த சமயம் அவர் புகைப்படங்கள் வெளியீட்டு வந்தாலும் பெரிய அளவில் இது சஞ்சய் பங்காரின் மகன் என்று தெரியவில்லை என்பதால் இந்த தகவல் வைரலாகவில்லை.

இதனையடுத்து, சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட பிறகு இது சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் என தெரியவந்தது. இதன் காரணமாக அவர் ஆணாக இருந்து பெண்ணாக மாறிய செய்தியும் வைரலாகி கொண்டு இருக்கிறது. பெண்ணாக மாறியதைத் தொடர்ந்து தன்னுடைய பெயரை அனாயா எனவும் மாற்றிக்கொண்டார்.

unknown node

பெண்ணாக மாறியது குறித்துப் பேசும் வகையில், வீடியோ ஒன்றை வெளியீட்டு அவர் அந்த விடியோவையும் நீக்கியுள்ளார். தற்போது மான்செஸ்டரில் வாழும் அனாயா, முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனி மற்றும் கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை அந்த வீடியோவில் பகிர்ந்தார்.

அதற்கு முன்னதாக மற்றொரு பதிவில், ” என் கனவான தொழில் வெற்றி பெற கிரிக்கெட் விளையாடுவது பல தியாகங்களால் நிரம்பிய பயணமாக உள்ளது. காலையிலேயே மைதானத்தில் கிளம்பி மற்றவர்களின் சந்தேகங்களையும் விமர்சனங்களையும் எதிர்கொள்வது சகலமும் தைரியம் வேண்டும் என அந்த வீடியோவின் கேப்ஷனில் அனாயா கூறியிருந்தார்.

கிரிக்கெட்டுக்கு மட்டுமின்றி எனக்கு இன்னொரு பயணமும் இருந்தது. என்னை உண்மையில் நான் யார் என்று ஏற்கும் பயணத்தில் பல சவால்களை எதிர்கொண்டேன். நான் உண்மையான என்னைப் பெண்ணாக ஏற்க எதிர்கொண்ட சவால்கள் எளிதானது இல்லை. இன்று நான் என்னை கிரிக்கெட் விளையாட்டில் மட்டுமே இல்லை..எனக்குப் பிடித்தது போல பெண்ணாக மகிழ்ச்சியாக வாழ்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

unknown node

இருப்பினும் திடீரென அவர் இந்த பதிவை அவர் நீக்கியதற்கான காரணம் குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை. ஒரு பக்கம் இவர் பெண்ணாக மாறியது குறித்து விமர்சனங்கள் எழுந்தாலும் பெரிய அளவில் அவர் அவருக்குப் பிடித்தது போல் வாழ்கிறார் என அவருக்கு ஆறுதலும் எழுந்து வருகிறது.