இவர்கள் தான் 2025 சிறந்த டெஸ்ட் வீரர்கள்! ரிஷப் பண்டை தேர்வு செய்யாத அபினவ் முகுந்த்!

பண்ட் 2025 ஆண்டில் 13 இன்னிங்ஸ்களில் 629 ரன்கள் எடுத்து 48.38 சராசரியுடன் 2 சதங்கள், 3 அரைசதங்கள் அடித்த போதிலும் அபினவ் முகுந்த் அவரைத் தவிர்த்துள்ளார்.

rishabh pant test

டெல்லி :2025 ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் XI அணியை முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்த் தேர்வு செய்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், உலகின் முன்னணி வீரர்களைத் தேர்ந்தெடுத்து அணியை அறிவித்தார். இந்த அணியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்ரிக்கா, இந்தியா ஆகிய நான்கு முன்னணி அணிகளின் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த 5 வீரர்கள் இடம் பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.அபினவ் முகுந்தின் அணியில் ஓப்பனர்களாக இந்தியாவின் கே.எல். ராகுலும் இங்கிலாந்தின் பென் டக்கெட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கே.எல். ராகுல் ஆண்டு முழுவதும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதும், டக்கெட் டெஸ்ட் ஃபார்மெட்டில் சிறப்பான பங்களிப்பை அளித்ததும் இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

மிடில் ஆர்டரில் தென்னாப்ரிக்காவின் டெம்பா பாவுமா (கேப்டன்), இங்கிலாந்தின் ஜோ ரூட், இந்தியாவின் சுப்மன் கில் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.ஆல்-ரவுண்டராக இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பராக ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி இடம்பெற்றுள்ளார். அவர் தேர்வு செய்துள்ள வீரர்களில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் இடம்பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பண்ட் 2025 ஆண்டில் 13 இன்னிங்ஸ்களில் 629 ரன்கள் எடுத்து 48.38 சராசரியுடன் 2 சதங்கள், 3 அரைசதங்கள் அடித்த போதிலும் அபினவ் முகுந்த் அவரைத் தவிர்த்துள்ளார்.பந்துவீச்சில் தென்னாப்ரிக்காவின் சைமன் ஹார்மர், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், இந்தியாவின் முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்திய கேப்டன் சுப்மன் கில் ஆண்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அபினவ் முகுந்த் தேர்வு செய்த சிறந்த டெஸ்ட் XI: கே.எல். ராகுல், பென் டக்கெட், டெம்பா பாவுமா (கேப்டன்), ஜோ ரூட், சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), சைமன் ஹார்மர், மிட்செல் ஸ்டார்க், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா. இந்த அணி ஆஷஸ் தொடர் உள்ளிட்ட ஆண்டின் முக்கிய டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களை அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரிஷப் பண்ட் இடம்பெறாதது கிரிக்கெட் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.