,

ஒரே டி-20 போட்டியில் இரு இந்தியர்கள் 4 விக்கெட்கள் எடுத்து புதிய வரலாற்று சாதனை.!

By

இந்தியா-நியூசிலாந்து 3ஆவது டி-20 போட்டியில் சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் புது வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய 3ஆவது டி-20யில் இந்தியாவின் மொஹம்மது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் புதிய வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர். இந்த போட்டியில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி கான்வே(59) மற்றும் கிளென் பிலிப்ஸ்(54) ஆகியோரின் உதவியால் 20 ஓவர்களில் 160 ரன்கள் குவித்தது. இருந்தும் இந்திய அணி பௌலர்கள் நியூசிலாந்தின் அனைத்து விக்கெட்களையும் எடுத்து அசத்தினர்.

இதில் மொஹம்மது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஒரே போட்டியில் 4 விக்கெட்களை எடுத்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளனர். மொஹம்மது சிராஜ் 4 ஓவர் வீசி 17 ரன் கொடுத்து 4 விக்கெட்களும், அர்ஷ்தீப் சிங் 4 ஓவர் வீசி 37 ரன் கொடுத்து 4 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதன்மூலம் ஒரே டி-20 யில் இரண்டு இந்தியர்கள் 4 விக்கெட்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

Dinasuvadu Media @2023